Posts

Showing posts from February, 2023

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு!

Image
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய தகவல்!! தமிழக அரசு அறிவிப்பு! GET NEWS COVER தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தற்போது ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியில் அதிக அளவு மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர் ஆனால் அதற்குரிய ஆசிரியர் எண்ணிக்கை இல்லை எனவே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது அதன்படி பெங்களூருவில் உள்ள மண்டல ஆங்கில கல்வி பயிற்சி மையத்தில் இங்குள்ள ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது.  மேலும் இதற்காக முதல் கட்டமாக சென்னை கோவை திருச்சி சேலம் வேலூர் திருநெல்வேலி தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் 13 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக பெங்களூருவில் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன?

Image
அரசு அலுவலகங்களுக்கு மின் வாரியம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன? GET NEWS COVER      மின் கட்டணம் செலுத்தாத அரசு துறைகளின் மின் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆய்வுக் கூட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து ஒழுங்காக மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள மற்ற அரசுத் துறைகளின் அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் மின்வாரிய தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் அத்தியாவசிய சேவைகளான மருத்துவம்,குடிநீர்,தெருவிளக்கு, உள்ளிட்டவற்றை வழங்கும் துறைகள் 7 நாட்களுக்குள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Image
மாசி மகத்திற்கு விடுமுறை!! மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு! GET NEWS COVER கும்பகோணம் மாசிமக திருவிழாவிற்கு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க பரிசீலிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவி்ட்டு உள்ளது. கும்பகோணத்தில் மார்ச் 6ம் தேதி நடக்கும் மாசிமக திருவிழாவிற்கு பொதுமக்களின் நலன் கருதி விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கும்பகோணத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் பொதுநல வழக்கு தொடரந்திருந்தார். மேலும் அவரது மனுவில் திருவையாறு தியாகராஜர் ஆராதனைக்கு அன்றைய தினம் விடுமுறை அளித்ததை போல மார்ச் 6 ல் நடக்கும் மாசிமகத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டுமெனவும் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை விசாராத்த நீதிபதிகள் இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சாயர் வரும் மார்ச் 1~ம் தேதிக்குள் உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர்.

இனிமேல் 6 வயது தான்!! மத்திய அரசு புதிய உத்தரவு.

Image
இனிமேல் 6 வயது தான்!! பள்ளிகளில் சேர மத்திய அரசு புதிய உத்தரவு. GET NEWS COVER 1 ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை வயதை சீரமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும்  மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  அதன்படி குழந்தைகளுக்கு  3 வயதாகும் போது PRE-KG, LKG, UKG சேர்க்கலாம் என்றும் 1ம் வகுப்பில் சேர்க்கும் போது 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் குழந்தைகளுக்கான அடிப்படை கற்றல் திறன் மேம்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  3 வயது முதல் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஐந்து வருட கற்றல் வாய்ப்புகள் அடிப்படைக் கட்டத்தில் உள்ளன. இதில் 3 வருட முன்பள்ளிக் கல்வி மற்றும் 2 வருட ஆரம்ப ஆரம்ப தரம்-I மற்றும் தரம்-II ஆகியவை அடங்கும்.  அங்கன்வாடிகள் அல்லது அரசு/அரசு உதவி பெறும், தனியார் மற்றும் அரசு சாரா முன்பள்ளி மையங்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை மூன்றாண்டுகளுக்கு அணுகுவதை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு!! பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Image
IDBI வங்கியில் வேலைவாய்ப்பு!! பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! GET NEWS COVER IDBI  வங்கிகளில் நாடு முழுவதும் காலியாக உள்ள 600 உதவி மேலாளர்்் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு வங்கி அல்லது நிதி நிறுவனம் போன்றவற்றில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பணியின் பெயர்   உதவி மேலாளர் கல்வித்தகுதி பட்டப்படிப்பு வயது வரம்பு 21 முதல் 30 க்குள் விண்ணப்பிக்க தேதி 17.02.2023 முதல் 28.02.2023 வரை தேர்வு முறை ஆன்லைன் மற்றும் நேர்முக தேர்வு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மேலும் விவரங்களுக்கு IDBI வங்கியின் அதிகாரபூர்வ இணைய தளமான  https://www.idbibank.in  தொடர்பு கொள்ளவும்.

தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்!! முக்கிய அறிவிப்பு.

Image
தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். முதிர்வு தொகை பெறுவது எப்படி? முழு விவரம். GET NEWS COVER பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் த மிழக அரசின் சமூக நலத்துுறைை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிிறது. அதன்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் சேமிப்பு பத்திரங்களாக வழங்கப்படுகிறது. மேற்படி சேமிப்பு பத்திரம், அந்த பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.   விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன்,  10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்,  ஆதார் அட்டை நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மாற்றுச்

கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு!! தமிழக அரசு அறிவிப்பு.

Image
கட்டிட முடிவு சான்று பெறாமலே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறலாம்!! தமிழக அரசு அறிவிப்பு! GET NEWS COVER  தமிழகத்தில் இனி கட்டிட முடிவு சான்று இல்லாமலே மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வீடுகள் கட்டும் போது மேற்படி கட்டிடங்களின் முடிவு சான்றை வழங்கிய பிறகே மின் இணைப்புகள் மற்றும் கழிவு நீர் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகள் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன. இந்த நடைமுறையால் இதுவரை மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இதனை பெறுவதில் அதிக காலதாமதமும் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு இனி கட்டிட முடிவு சான்று பெறாமலே மின் இணைப்பு, மற்றும் குடிநீர் இணைப்புகளை பெறலாம் எனவும் வீடுகள் கட்ட துவங்கும் முன்னரே கூட மின் இணைப்பு உள்ளிட்டவற்றை பெறலாம் என தமிழக அரசின் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

Image
சென்னையில் நாளை ( 17.02.2023) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் GET NEWS COVER தமிழகத்தில்  உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.  வேலைவாய்ப்பு முகாம்களில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்கின்றனர். அதன்படி நாளை (17.02.2023) சென்னை ஆலந்தூரில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் 8 ம் வகுப்பு முதல் ITI,டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேற்படி முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரங்களை  https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என தகவல் தெரிவிிக்கப்பட்டிருக்கிிறது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 800 ஓட்டுநர் காலிபணியிடங்கள் அறிவிப்பு

Image
தமிழ்நாடு அரசின் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 800 ஓட்டுநர் காலிபணியிடங்கள் அறிவிப்பு GET NEWS COVER தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் ல் மொத்தம் ஒப்புதல் அளிக்கப்பட்ட 222 ஓட்டுநர் பணியிடங்களுக்கும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 684 (Driver cum Conductor)ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கு போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி இதற்கு கட்டாயம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.  18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  முதலுதவி சிகிச்சை அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.  நடத்துனர் பணிக்கு நடத்துனர் உரிமம் அவசியம் பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். மேலும்

பிப்ரவரி 16 ம் தேதியே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க மின் வாரியம் அறிவிப்பு!!!

Image
பிப்ரவரி 16 கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! GET NEWS COVER தமிழகத்தில் மின்சார நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது. மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வரும் 2023 ஜனவரி மாதம் கடைசி என தமிழ்நாடு மின்சார வாரியம் காலக்கெடு நிர்ணயித்து இருந்தது.   இந்நிலையில் இந்த பணி இன்னும் முடிவடையாததால் பிப்ரவரி 16 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனி மின் கட்டணம் செலுத்த முடியும். மின் இணைப்புடன் ஆன்லைன் மூலம் இணைக்க http://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml என்ற இணையதள முகவரியில் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

இந்திய வனப்பணி வேலை!! UPSC அறிவிப்பு!!

Image
இந்திய வனப்பணி வேலை!! UPSC அறிவிப்பு!! GET NEWS COVER UPSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசின் உயர்பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. IAS மற்றும் IPS உள்ளிட்ட தேர்வுகளை போல இந்திய வனப்பணியான IFS ( Indian Forest Service Examination) பணிக்கும் மூன்று வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெறுகின்றன. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம். இந்திய வனப் பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறும். இதற்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ 100

ஆதார் அட்டையில் பிழைகள்!! ஆன்லைனில் சரி செய்வது எப்படி??

Image
ஆதார் கார்டில் எழுத்து பிழை!! ஆன்லைன் மூலம் சரிசெய்வது எப்படி? GET NEWS COVER  இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை ஆதார் வழங்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் அட்டையில் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் முக்கியமான சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். அவ்வாறு பிழைகள் இருப்பின் அதனை  ஆன்லைன் மூலம் சரி செய்து கொள்ளலாம். 1. முதலில்   https://ssup.uidai.gov.in/ssup/ இல் ஆதார் போர்ட்டலில் சென்று  பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி ‘ Login ’ என்பதைக் கிளிக் செய்யவும். 2. ‘Service’ பிரிவில் சென்று ‘' Update Aadhaar online ' என்பதைக் கிளிக் செய்யவும்.  3. ‘ Edit name ' என்பதை தேர்ந்தெடுத்து சரியான எழுத்துகளை டைப் செய்து  submit பட்டனைக் கிளிக் செய்யவும். இதற்கான கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும் அதனை டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்த

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி சிறுவன் உயிரிழந்த விவகாரம்!!நிவாரணம் வழங்கிய அரசு.

Image
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளி சிறுவன் உயிரிழந்த விவகாரம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு. GET NEWS COVER செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் சிறுவனின் தாயாரிடம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் மற்றும் அரசு சார்பில் வீடும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அளிக்கப்பட்டது. சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் பிரியா இவரது மகன் 17 வயதான கோகுல் ஸ்ரீ இவர் மீது தாம்பரம் ரயில்வே போலீசார் ரயில்வே பேட்டரி ரிலே பாக்ஸ் திருடியது தொடர்பாக திருட்டு வழக்கு பதிவு செய்து கடந்த  ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அதன் பிறகு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அங்குள்ள காவலர்கள் தாக்கியதில் சிறுவன் கோகுல் ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக காவலர்கள் 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  மேலும் இதற்காக பல்வேறு தரப்பினர் மத்தியில் கண்டன குரல்கள் எழுந்தன. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் அரசு வேலையும் அரசு சார்பில் வீட

இந்திய அஞ்சல் துறையில் 41000 பணியிடங்கள்!! உடனே விண்ணப்பிக்கலாம்!!!

Image
இந்திய அஞ்சல் துறையில் 41000 காலி பணியிடங்கள்!! உடனே விண்ணப்பிக்கலாம்!! GET NEWS COVER இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் மொத்தம் 41000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 3167 காலி பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணியின் பெயர் கிளை அஞ்சல் அலுவலர் உதவி கிளை அஞ்சல் அலுவலர் அஞ்சல் பணியாளர் கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு 18 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்க கடைசி தேதி  16.02.2023 விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்  மேலும் விவரங்களுக்கு http://www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.