Breaking News

"5 கிலோ உருளைகிழங்கு" லஞ்சம் கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்.!

NEWS COVER
0
"5 கிலோ உருளைகிழங்கு" லஞ்சம் கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்.!
GET NEWS COVER

உத்தர பிரதேச மாநிலத்தில் விவசாயிடம் லஞ்சமாக 5 கிலோ உருளைக்கிழங்கு  கேட்ட உதவி ஆய்வாளர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

உத்திர பிரதேச மாநிலத்தில் ராம் கிரி பால் சிங் என்கிற உதவி ஆய்வாளர் ஒரு வழக்கினை முடித்து வைப்பதற்கு லஞ்சமாக 5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும் என கேட்ட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

அந்த ஆடியோவில் குற்றம் சாட்டப்பட்ட உதவி ஆய்வாளர் ஒரு விவசாயியிடம் 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்டுள்ளார். அதற்கு அந்த விவசாயி என்னால் 2 கிலோ உருளைக்கிழங்கு மட்டுமே  கொடுக்க முடியும் என்று பதில் அளித்துள்ளார். கடைசியில் 3 கிலோ உருளைக்கிழங்கு கொடுப்பதாக இருவரும் பேசிக் கொண்டனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் "உருளைக்கிழங்கு" என்பது பணத்திற்கான குறியீடு என்று கூறப்படுகிறது. 

மேற்படி ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து மாவட்ட எஸ் பி அமித் குமார் ஆனந்த் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் ராம் கிரிபால் சிங்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Tags: தேசிய செய்திகள்