தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அறிவிப்பு.
NEWS COVER
0
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
தமிழகத்தில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் கோவை,நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(20.8.2022) முதல் வரும் 5 நாட்களுக்கு தமிழகம்,மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் தமிழக மாவட்டங்களான கோவை,நீலகிரி,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்