தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் அறிவிப்பு.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! GET NEWS COVER வளிமண்டல கீழ் அடுக்குகளில் கிழக்கு மேற்கு காற்று சந்திக்கும் பகுதியின் நிலை வருகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி, கோவை நீலகிரி, திருப்பூர், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.