25 ஆம் தேதி கரையை கடக்கிறது SITRANG புயல்!! தமிழகத்திற்கு பாதிப்பா??
NEWS COVER
0
25 ஆம் தேதி கரையை கடக்கிறது SITRANG புயல்!! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
GET NEWS COVER
அந்தமான் கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகி இருக்கும் SITRANG புயல் வரும் 25ஆம் தேதி அன்று அதிகாலை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று வரும் 25ம் தேதி அதிகாலை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் SITRANG புயலின் காரணமாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் அம்மாநில அரசை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.
Tags: வானிலை செய்திகள்