தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் . அமைச்சர் அறிவிப்பு
NEWS COVER
0
தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஜாதி மத பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் பயிலும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அவ்வப்போது பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் எந்த ஒரு அரசியல் கட்சியின் அமைப்பினரும் எந்தவித கூட்டங்களையும் நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி வளாகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்றும் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்