Breaking News

உபி−யில் 600 கிலோ கஞ்சாவை தின்ற எலிகள்!!!! போலீஸ் அறிக்கை!!

NEWS COVER
0
உபி−யில் 600 கிலோ கஞ்சாவை தின்ற எலிகள்!!!! போலீஸ் அறிக்கை!!
GET NEWS COVER

உத்திரபிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 600 கிலோ கஞ்சா போதை பொருளை எலிகள் தின்று தீர்த்ததாக போலீஸ் அறிக்கை வழங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்படும் போதை பொருட்களை பொதுவாக போலீசார் சிறிதளவு மாதிரிகளை மட்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டு மற்றவைகளை  வழக்கு சொத்துக்களுடன் பாதுகாத்து வருவது வழக்கம். 
இந்நிலையில் மதுரா காவல் நிலையத்தில் போடப்பட்ட ஒரு போதை பொருள் வழக்கில் நீதிமன்றத்தில்  தீர்ப்பளிக்கும் சமயத்தில் கைப்பற்றப்பட்ட மொத்த கஞ்சாவையும் ஒப்படைக்க  உத்தரவிட்டபோது மதுரா காவல் நிலைய போலீசார் தங்கள் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 600 கிலோ கஞ்சாவை எலிகள் கடந்த 2 ஆண்டுகளாக தின்று தீர்த்து விட்டதாக அறிக்கை வழங்கி உள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags: தேசிய செய்திகள்