வீட்டில் கிளிகளை வளர்க்க தடை!!! வனத்துறை உத்தரவு!
NEWS COVER
0
கிளி வளர்க் தடை!! மீறினால் சிறை! வனத்துறை அறிவிப்பு.
GET NEWS COVER
கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும் கடைகளில் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் ஆகும். மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் வனத்துறை
அறிவித்துள்ளது.
மக்கள் விரும்பி வீடுகளில் வழக்கம் செல்ல பறவைகளில் முக்கியமானது பச்சைக்கிளி. பலர் பச்சைக் கிளிகளை கடைகளில் இருந்தும் ஆன்லைன் மூலமாகவும் வாங்கி வீடுகளில் வளர்த்து வருகின்றனர்.
ஏற்கனவே கிளி ஜோசியம் பார்க்கும் நபர்களிடமிருந்து கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சில கடைகளில் இருந்தும் விற்பனைக்காக வைத்திருந்த கிளிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட வனச்சரகர் அருண்குமார் கூறுகையில் இதுவரை வீடுகள் மற்றும் கடைகளிலிருந்து சுமார் 400 கிளிகளை பறிமுதல் செய்துள்ளோம். அவைகள் இங்கு உள்ள கோவை மாவட்ட வன அலுவலகத்தில் செயல்படும் பறவைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது எனவும் கிளிகளை வீடுகளில் வளர்க்கும் மக்கள் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் மக்களுக்கு இது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிளிகளை வீடுகளில் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது கூடாது எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இதை மீறினால் 6 மாதம் வரை சிறை தண்டனை என கோவை மாவட்ட வனச்சரகர் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்