Breaking News

ஆதார் அட்டையில் பிழைகள்!! ஆன்லைனில் சரி செய்வது எப்படி??

NEWS COVER
0
ஆதார் கார்டில் எழுத்து பிழை!! ஆன்லைன் மூலம் சரிசெய்வது எப்படி?

GET NEWS COVER

 இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தனித்துவ அடையாள அட்டை ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் அட்டையில் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது. ஆதார் அட்டையில் உள்ள விவரங்களில் ஏதேனும் பிழை இருந்தால் முக்கியமான சேவைகளைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

அவ்வாறு பிழைகள் இருப்பின் அதனை  ஆன்லைன் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

1. முதலில்  https://ssup.uidai.gov.in/ssup/ இல் ஆதார் போர்ட்டலில் சென்று பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி ‘Login’ என்பதைக் கிளிக் செய்யவும்.

2. ‘Service’ பிரிவில் சென்று ‘'Update Aadhaar online' என்பதைக் கிளிக் செய்யவும்.

 3. ‘Edit name' என்பதை தேர்ந்தெடுத்து சரியான எழுத்துகளை டைப் செய்து submit பட்டனைக் கிளிக் செய்யவும்.

இதற்கான கட்டணமாக 50 ரூபாய் செலுத்த வேண்டும் அதனை
டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும், 

சேவைக் கட்டணத்தைச் செலுத்தியவுடன், சேவைக் கோரிக்கை எண்ணைப் பெறுவீர்கள்.

Tags: நுகர்வோர் செய்திகள்