தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்!! முக்கிய அறிவிப்பு.
NEWS COVER
0
தமிழக முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம். முதிர்வு தொகை பெறுவது எப்படி? முழு விவரம்.
GET NEWS COVER
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் தமிழக அரசின் சமூக நலத்துுறைை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிிறது.
அதன்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே இருந்தால் அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25 ஆயிரம் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் சேமிப்பு பத்திரங்களாக வழங்கப்படுகிறது.
மேற்படி சேமிப்பு பத்திரம், அந்த பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தால் மட்டுமே வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்தும், முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள், மாவட்ட சமூகநல அலுவலகத்தில் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த போது வழங்கப்பட்ட சேமிப்பு பத்திரத்துடன்,
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்,
ஆதார் அட்டை நகல்,
2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்,
மாற்றுச்சான்றிதழ் TC நகல்,
குடும்ப அட்டை நகல்,
வங்கி பாஸ் புத்தக நகல்,
ஆகியவற்றுடன் முதிர்வு தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி விவரங்கள்் தெரிந்து கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்