விடாமுயற்சி! தன்னம்பிக்கை தந்த வெற்றி! கை கால்கள் முறிந்த நிலையில் சாதித்த பிளஸ் 2 மாணவி
Unknown
0
விடாமுயற்சி! தன்னம்பிக்கை தந்த வெற்றி! கை கால்கள் முறிந்த நிலையில் சாதித்த பிளஸ் 2 மாணவி!
GET NEWS COVER
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய கை, கால்கள் முறிந்த நிலையிலும் 543 மதிப்பெண்களை எடுத்து சாதித்துள்ளார்.
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த மாணவி உமா மகேஸ்வரி. இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளிகள். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடிபடியிலிருந்து உமா தவறி விழுந்தார். அதில் அவருடைய இரு கால்களும் அவருடைய இடது கையும் முறிந்தது.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை எழுத முடியாதோ என நினைத்து வருந்தினார். ஆனால் தன்னுடைய விடாமுயற்சியால் தன்னம்பிக்கையுடன் நன்றாக படித்து பிளஸ் 2 தேர்வை எழுதினார். சக மாணவிகள் இவரை தூக்கி சென்று தேர்வறையில் விட்டனர். தற்போது உமா மகேஸ்வரி 543 மதிப்பெண்களை எடுத்ததை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
Tags: தமிழக செய்திகள்