Breaking News

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Unknown
0
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பயணம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

GET NEWS COVER
5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு
தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும்  இலவசமாக பயணம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இதுவரை அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு எடுக்க வேண்டியதில்லை. மேலும் 3 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதி பயணக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயணக்கட்டணம் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளிடம் பாதி கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்