பென் ஸ்டோக்ஸ் சம்பளம் குறைப்பு!! CSK நிர்வாகம் அதிரடி.!
NEWS COVER
0
பென் ஸ்டோக்ஸ் சம்பளம் குறைப்பு!! CSK நிர்வாகம் அதிரடி.!
GET NEWS COVER
IPL 2023 தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று ( 28.5.2023) அகமதாபாத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொரு அணியிலும் சில வீரர்கள் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினர்.
இந்த ஆண்டு சென்னை அணிக்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சை 16.25 கோடி ரூபாய் கொடுத்து CSK நிர்வாகம் வாங்கியது. ஆனால்அவருக்கு ஏற்பட்ட பிட்னஸ் பிரச்சனை மற்றும் முழங்கால் காயம் காரணமாக சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். மேலும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். மேலும் தற்போது அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து புறப்பட்டு சென்று விட்டார்.
இந்நிலையில் சிஎஸ்கே நிர்வாகம்
அவரது சம்பளத்திலிருந்து 20% குறைப்பு செய்ய முடிவு செய்திருக்கிறது. 14 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே பென் ஸ்டோக்ஸ் விளையாடி இருப்பதால் அவருக்கு ஒரு போட்டிக்கு சராசரியாக 23.20 லட்ச ரூபாய் வீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ் சம்பளத்தில் மொத்தம் 2.78 கோடி ரூபாய் குறைக்கப்படும்.
Tags: விளையாட்டு செய்திகள்