Breaking News

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒர் அரிய வாய்ப்பு!

Unknown
0
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
GET NEWS COVER

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த முகாம்களின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து ஜூன் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முகாமின் மூலமாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது எனவும் அ இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகாமில் கலந்துகொள்பவர்கள் தங்கள்  தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்