மாதம் ரூ.1,000 அளிக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15 முதல் தமிழக முதல்வர் அறிவிப்பு
மாதம் ரூ.1,000 அளிக்கும் அரசின் உதவித்தொகை திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று முதல்வர் பெயரிட்டுள்ளார். மேலும், திட்டம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலின் போது இத்திட்டத்திற்காக ரூபாய் 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என முதல்வர் அறிவித்திருந்தார்
இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தலைமை செயலகத்தில் இன்று முதல்வர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
அதன் பின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை அளிக்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்று பெயரிட்டு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்
மேலும் பழங்குடியின இதர ஆதரவற்றோர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வேண்டும் என்றும், சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்கள் இந்த திட்டத்தில் பயனடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும், விளிம்பு நிலை மக்களிடம் ஆதார் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவற்றை பெறுவதற்கான ஏற்பாடு செய்து உரிமை தொகை கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும், அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்