12ம் வகுப்பு மாணவர்களுக்கு இ மெயில் கட்டாயம் – பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு புதிதாக மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி தொடங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் மாணவர்கள் இந்த மாதம் ஜூலை 30ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி தொடங்க தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் உதவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்