பிட்ஸா 3 திரை விமர்சனம்
நடிகர்கள்;-
அஸ்வின்,
கவுரவ்,
பவித்ரா மாரிமுத்து
அபிநட்சத்திரா,
அனுபமா குமார்,
நாராயணன்,
காளி வெங்கட்,
கவிதா பாரதி
இயக்குனர் :-
மோகன் கோவிந்த்
இசை:-
அருண் ராஜ்
சென்னையில்உணவகம் ஒன்றை நடத்தி வரும் அஸ்வின், காவல் ஆய்வாளர் கவுரவின் தங்கை பவித்ரா மாரிமுத்தை காதலிக்கிறார்.அந்த உணவகத்துக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் மம்மி பொம்மையை அங்கேயே விட்டுச் சென்றுவிடுகிறார். இதன் பின்னர் அஸ்வினின் உணவகத்தில் இரவு நேரத்தில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. ரெஸ்டாரண்டில் உரிமையாளருக்கோ, பணியாளர்களுக்கோ தெரியாமல் அடிக்கடி ஒரு சுவீட் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த சுவீட் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
யார் சுவீட் செய்தார்கள் என்று மர்மமாக உள்ளது அதற்கான காரணத்தை அறிய முடியாமல் குழம்பி நிற்கின்றார் அஸ்வின்
இதற்க்கிடையில் தொடர்ந்து 2 கொலைகள் நடக்க இந்த கொலைகள் மீதான குற்றம் அஸ்வின் மீது விழுகிறது.
யார் சுவீட் செய்தார்கள்? கொலைக்கான காரணம் என்ன? என்பதே மீதி கதை.
Tags: சினிமா