Breaking News

போக்குவரத்து சிக்னல் விதிமீறல் நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார் முழு விவரம்

NEWS COVER
0

விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார்.


GET NEWS COVER

நடிகர் விஜய் நேற்று தனது பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்க்கு நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ கேமிராவில் பதிவானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்தநிலையில், போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நவ., 20ல், சென்னை பனையூரில் மக்கள் இயக்க அலுவலகத்தில், ரசிகர்களை விஜய் சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய் வந்த காரின் கண்ணாடியில், கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்துக்காக அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: சினிமா