Breaking News

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைரூ.6000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு – தமிழ்நாடு அரசு

NEWS COVER
0

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்கு உயர்வு – தமிழ்நாடு அரசு


GET NEWS COVER

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை 2 மடங்கு உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 2 மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு. 

அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.2000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ரூ.6000 ஆகவும், 

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.8000ஆகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும், பட்டபடிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.6000-ல் இருந்து ரூ.12,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்