திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை!! முழு விவரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடும்பத்துடன் திமுக கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டார்.
GET NEWS COVER
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியா. இவரின் கணவர் அருள்லால். இவர்களுக்கு மோனிகா ஸ்ரீ(18) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், இன்று திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால்
அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18 வயது மகள் விஷம் குடித்து தற்கொலை கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்