ஓடும் பேருந்து முன் பாய்ந்து உயிரையே தியாகம் செய்த தாய்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி
மகன் கல்லூரி கட்டணம் கட்ட ஓடும் பேருந்து முன் பாய்ந்து உயிரையே தியாகம் செய்த தாய்.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி
சேலத்தில் தூய்மை பணியாளர் ஒருவர் தனது மகனின் கல்லூரி கட்டணத்தை செலுத்த தனது உயிரை விட்டுள்ளார்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தவர் பாப்பாத்தி அவருக்கு 46 வயது ஆகும் கணவரை இழந்த நிலையில் தனது மகன் மற்றும் மகள்களுடன் வாழந்து வந்துள்ளார்
இந்நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி காலை சேலம் மாநகர் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து மோதி பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சேலம் டவுன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது, தற்கொலை செய்யும் நோக்கத்தோடு பேருந்தின் முன்பு ஓடிச் சென்று பாப்பாத்தி விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அதனை தொடர்ந்து அவரது அவரது மகனிடம் விசாரித்ததில் கல்லூரியில் செமஸ்டர் கட்டணம் 45 ஆயிரம் ரூபாய் செலுத்தும் படி கல்லூரி நிர்வாகம் கூறியிருக்கிறது.அந்த பணத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதற்காக அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கடன் கேட்டுள்ளார் கடனும் கிடைக்காததால் மனமுடைந்த பாப்பாத்தி விபத்தில் உயிரிழந்தால் அரசு நிவாரணத் தொகை கிடைக்கும். மகன் படிப்புக்கு உதவி கிடைக்கும் என நம்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார்
வீடியோ பார்க்க:-
https://twitter.com/rameshibn/status/1681150867179814912
Tags: தமிழக செய்திகள்