விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இலவச இரவு நேர பாடசாலை புதிய தகவல்..!
தளபதி விஜய் பிறந்தநாளில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்த போது ’விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் விரைவில் இரவு நேர பாடசாலை தொடக்கப்படும் என்று தெரிவித்தார்.
GET NEWS COVER
பள்ளி சென்று படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இந்த இரவு பாடசாலையில் பாடங்கள் எடுப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்திக்கும் விஜய், இயக்கத்தை விரிவுபடுத்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அவரது அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28-ம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்’ திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.
இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளான அதாவது ஜூலை 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கண்தானம் செய்வதற்காக விழியகம், இரத்த தானம் செய்வதற்காக குருதியகம், பசி பட்டினியால் தவிப்போருக்காக விருந்தகத்தை தொடங்கிய விஜய் தற்போது பள்ளி மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலையை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: சினிமா தமிழக செய்திகள்