தமிழகத்திற்கு 21ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
NEWS COVER
0
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வரும் 21ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல தென்தமிழக வங்க கடல் பகுதியில் காற்று வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்