Breaking News

இந்திய குடியுரிமை வாங்கினார் நடிகர் அக்‌ஷய்குமார் முழு விவரம்

NEWS COVER
0

நடிகர் அக்ஷய் குமார் பாலிவுட் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோவாக கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓஎம்ஜி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



55 வயதாகும் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடியுரிமையுடன் இதுவரை நடித்துவந்தார்.இந்திய படங்களில் நடித்தாலும் நடிகர் அக்ஷய் குமார் கனடா நாட்டு குடிமகன் தான் என பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு இந்திய குடியுரிமை கிடைத்துவிட்டதாக அறிவித்துள்ளார். அதற்கான டாக்குமெண்ட்டை பகிர்ந்துள்ள அவர் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

தனது டிவிட்டர் பக்கத்தில் இதயமும், குடியுரிமையும் இந்தியன்… இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள், ஜெய்ஹிந்த்,” எனக் குறிப்பிட்டு இந்தியக் குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழையும் பதிவிட்டுளளார்.

Tags: சினிமா