ஊட்டியில் சாக்லேட் தயாரித்த ராகுல் காந்தி! வைரல் வீடியோ.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஊட்டியில் உள்ள சாக்லேட் நிறுவனத்தில் சாக்லேட் தயாரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில், ஆகஸ்ட் 12-ம் தேதி ஊட்டிக்கு சென்றிருக்கிறார்.
அங்கு ஆல் வுமென் ஃபேக்டரி க்கு சென்ற ராகுல் காந்தி அவர்களுடன் மகிழ்ச்சியோடும் அன்போடும் உரையாடினார். மேலும், அவர்களிடம் ராகுல் காந்தி எப்படி சாக்லேட் தயாரிப்பது என்று கேட்டு அதன்படி சாக்லேட் தயார் செய்திருக்கிறார்.
ராகுல் காந்தி சாக்லேட் தயார் செய்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/RahulGandhi/status/1695657840575156450
Tags: வைரல் வீடியோ