யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு
யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவர் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் எண்பப்வருக்கும் போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில், திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு லோகநாயகி கருத்தரித்தார்.லோகநாயகி, கணவரிடம் வீட்டிலேயே அதுவும் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரும் யூ டியூப் பார்த்து பிரசவம் செய்வது எப்படி என கற்று கொண்டுள்ளார்
இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, கணவர் பிரசவம் பார்த்துள்ளார்
சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் நச்சுக்கொடி வெளியே வராமல் ரத்தப்போக்கு ஏற்பட்டது.
அப்போது திடீரென அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானது. சிறிது நேரத்தில் மயக்க நிலைக்கு சென்ற லோகநாயகியை போச்சம்பள்ளியில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லோகநாயகி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.புளியம்பட்டி கிராம செவிலியர் புகாரின் பேரில் போச்சம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்