Breaking News

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

NEWS COVER
0

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 நாளை முதல் 22ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்