Breaking News

நாளை வானில் நிகழும் சூப்பர் மூன் மிஸ் பண்ணாம பாருங்க

NEWS COVER
0

நாளை வானில் நிகழும் சூப்பர் மூன் மிஸ் பண்ணாம பாருங்க



ஆகஸ்ட் 30 ஆம் தேதியான புதன் கிழமை சூப்பர் ப்ளூ மூன் தோன்ற உள்ளது. இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம். 

வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும் நாளை மறுதினம் நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும்.இந்த மாதத்தில் வரக்கூடிய 2 ஆவது பவுர்ணமியாக இது அமையப் போகிறது. 

இந்த மாத தொடக்கத்தில் நிலவு பவுர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நீல நிலவு அன்று பூமிக்கு  3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நிலவு பிரகாசிக்கும்.

நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து அதே நேரம் பவுர்ணமியாக நிலவு காட்சியளித்தால் அதனை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கப்ப்டும்

நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிலோ மீட்டர் தூரத்திலும், சூப்பர் ப்ளூ மூன் தினத்தன்று 3,57,244 கிலோ மீட்டர் தூரத்திலும் பூமியை வலம் வரும்.

இதுபோன்ற நிகழ்வுகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்

கடைசியாக 2021 ஆகஸ்ட் மாதம் ப்ளூ மூன் வந்தது. அதைத் தொடர் நாளை வரவுள்ளது. அதன் பின்னர் 2024 ஆகஸ்டில் சூப்பர் ப்ளூ மூன் தென்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: சேவை செய்திகள்