Breaking News

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

NEWS COVER
0

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்



இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் 1.7.2023 அன்று தொடங்கிய காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.-

இதற்கு 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவை தொடர்ந்து புதுப்பித்து 30.6.2023 அன்றைய தேதியில் இருந்து,5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும், தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

உதவித்தொகை விண்ணப்பப்படிவம் பெற விரும்பும் நபர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில், விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 

அல்லது https://employmentexchange.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் வரும் 31ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம்” என தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்