Breaking News

BREAKING NEWS அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு..!

NEWS COVER
0

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. 



GET NEWS COVER

இந்த நிலையில், மதுரையில் அதிமுக நடத்த உள்ள மாநாட்டுக்கு தடைகோரி உயர் நீதிமன்றக் கிளையில் சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விமான நிலையத்தின் அருகில் மாநாடு நடக்க உள்ளது

பாதுகாக்கப்பட்ட பகுதியான இங்கு மாநாடு நடத்த விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மக்கள் அதிகமாக வருவதால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இந்த மாநாட்டிற்கு அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: அரசியல் செய்திகள்