Breaking News

வெங்கட் பிரபு தயாரிப்பில் யூ டியூபர் இர்பான் நடிக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் First Look போஸ்டர் வெளியானது

NEWS COVER
0

வெங்கட் பிரபு வழங்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் First Look போஸ்டர் வெளியானது!


மீசைய முறுக்கு படத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஆனந்தின் இயக்குனராக அறிமுகமாகும் படத்தைத் தான் தயாரிக்கப் போவதாக இயக்குநர் வெங்கட் பிரபு கடந்த ஜூலை 30ஆம் தேதி சமூக வலைதளங்களில் அறிவித்தார்.

இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தை ஒயிட் ப்லிம் ஸ்டுடியோஸ், மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்

Tags: சினிமா