Breaking News

ஆன்லைன் மோசடி! சைபர் கிரைமிற்கு ஆன்லைனில் புகார் செய்வது எப்படி?

NEWS COVER
0

ஆன்லைனில் பணம் இழந்தது சம்பந்தமாக புகார் என்றால் சைபர் குற்றங்கள் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் புகாரளிக்க வேண்டும். அப்போதுதான் போலீசாரால் பணப் பரிவர்த்தனையை உடனடியாக டிராக் செய்து நிறுத்தமுடியும் அந்த பணத்தை மீட்க முடியும்.


GET NEWS COVER

சைபர் குற்றங்களுக்கு ஆன்லைனில் புகார் அளிப்பது எப்படி:-

முதலில் மத்திய அரசின் https://cybercrime.gov.in என்ற இணைய பக்கத்தின் முகவரிக்கு செல்லுங்கள்

அடுத்து அதில் உள்ள REPORT CYBER CRIME என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அதன் பின்பு சிட்டிஸன் லாகின் என்பதை கிளிக் செய்து உங்கள் பெயர், இமெயில், போன் நம்பர், முகவரி போன்ற விவரங்களை பதிவு செய்யுங்கள்.

அடுத்து உங்கள் மொபைல் போன்னுக்கு வந்த OTP எண்ணை பதிவு செய்து Submit  கொடுங்கள்

அதன்பின்பு வரும் அடுத்த பக்கத்தில் உங்கள் புகார் குறித்து சரியான விவரங்களை டைப் செயுங்கள்

அதன்பின்பு நீங்கள் கொடுத்த விவரங்கள் அனைத்தும் சரியா என பார்த்து கொள்ளுங்கள்

அதன்பின்பு குற்றம் சம்மந்தமான ஆதாரம் இருந்தால் அதனையும் அதனுடன் இணைத்து கொள்ளுங்கள், மேலும் உங்களுக்கு சந்தேகமான நபர் பற்றிய விவரத்தையும் கொடுத்து இறுதியாக Submit  கொடுங்கள்

அதன்பின்பு உங்கள் புகார் பதிவு செய்யப்பட்டதற்கான புகாரின் அடையாள எண் உங்கள் மின்னஞ்சலுக்கு வரும்.

அதன்பின்பு உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அவ்வளவு தான்

Tags: சேவை செய்திகள்