உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி? முழு விவரம்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அரங்கில் நேரில் காண டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
GET NEWS COVER
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகின்றன.
25ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்க உள்ள நிலையில் டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு தொடக்கம். டிக்கெட் வாங்க விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
ரசிகர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும். இது அவர்களுக்கு டிக்கெட் கிடைக்க கூடுதல் வாய்ப்பாக இருக்கும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 3-ந்தேதி வரை கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது
டிக்கெட் முன்பதிவு செய்ய
https://www.cricketworldcup.com/register
Tags: விளையாட்டு செய்திகள்