Breaking News

வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்.

NEWS COVER
0

நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கு இன்றே கடைசி நாளாகும். மேலும், இந்த ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிக்கப்படாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது



கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென திரும்ப பெறுவதாக அறிவித்தது. 2023 செப்.30-ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் மாற்றி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டது. 

இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் கொடுத்து மற்றும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.இந்த ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலஅவகாசம் நீடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 2,000 நோட்டும் மாற்றும் அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது

Tags: உலக செய்திகள் தேசிய செய்திகள்