செப் 9 ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் - புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு
NEWS COVER
0
தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கு நிகராக தீவிரமாக இயங்கி வருகிறது. மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, அன்னதானம் , தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தல் , ஏழை எளிய மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த விஜய் பயிலகம் , இலவச சட்ட உதவி மையம் என பல்வேறு நலத்திட்டங்களை விஜய் மக்கள் இயக்கம் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி மக்கள் இயக்க அலுவலகத்தில், மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் செப்.9-ம் தேதி நடைபெறும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவித்துள்ளார்.
Tags: சினிமா