Breaking News

பிரபல திரைப்பட குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

NEWS COVER
0

அபூர்வ சகோதரர்கள், கோலமாவு கோகிலா, கார்கி உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!



ஆர்.எஸ்.சிவாஜி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள  குணச்சித்திர கலைஞர் ஆவார். மேலும் கமல்ஹாசன் திரைப்படங்கள் மற்றும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகியவற்றுடன் அதிகம் நடித்துள்ளார்

ஆர்.எஸ்.சிவாஜி ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை எம்.ஆர்.சந்தானம் 1940 களின் நடுப்பகுதியில் இருந்து ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் பேசும் படங்களுடன் தொடர்புடையவர். 

அபூர்வசகோதரர்கள் திரைப்படத்தில் போலீசாக வரும் ஜனகராஜுடன் எப்போதும் உடன் வவரும் சக போலீஸ் அதிகாரியாக ஆர்.எஸ்.சிவாஜி நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் அடிக்கடி பேசிய ‘சார் நீங்க எங்கயோ போயீட்டீங்க சார்’ வசனம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால் கண்டிப்பாக இவருக்கு ஒரு சிறிய வேடம் இருக்கும். அந்த அளவுக்கு பல படங்களில் ஆர்.எஸ்.சிவாஜி நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல் சார்தான். என் இதயத்தில் ஓட்டைகள் இருந்தது. சிகிச்சைக்கு அவரிடம்தான் உதவி கேட்டேன். எனக்கான எல்லா சிகிச்சையையும் அவரே பார்த்துக்கொண்டார். 

அதேபோல், கொரோனா காலத்தில் மாத்திரைகள் வாங்கவும் அவரிடம் உதவி கேட்டேன். அப்போது முதல் இப்போது வரை எனக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து மாதம் மாதம் மாத்திரைகள் வந்து கொண்டிருக்கிறது. கமல் சார் இல்லையேல் நான் இல்லை’ என கூறி இருந்தார்

Tags: சினிமா