சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் பட்டியல் இதோ
சென்னை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணங்களுக்காக திங்கள்கிழமை (25.09.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி மின் தடை ஏற்படும் பகுதிகள்
எண்ணூர்:-
பஜார், கத்திவாக்கம், காட்டுக்குப்பம், நேரு நகர், காமராஜ் நகர், VOC நகர், தாழங்குப்பம், பெரியகுப்பம், ETPS குவார்ட்டர்ஸ், எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணிக்கு மின் தடை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மடிப்பாக்கம்:-
கக்கன் தெரு, சதாசிவம் நகர், ஏஜிஎஸ் காலனி மற்றும் அனைத்துக்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
IT காரிடார்:-
DLF செம்மஞ்சேரி, சுனாமி குவார்ட்டர்ஸ், கணபதி சிண்டிகேட் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்