Breaking News

உடல் உறுப்பு தானம் செய்த நபர் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்த தமிழக அரசு முழு விவரம்!

NEWS COVER
0

உடல் உறுப்பு தானம் செய்த நபர் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்த தமிழக அரசு முழு விவரம்!



முதல்வர் ஸ்டாலின், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்

இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவிற்கு (37) இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது

இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார். கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இவர், தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார்.

Tags: தமிழக செய்திகள்