Breaking News

மகளிர் உரிமை தொகை இணையதளம் செயல்படாததால் மக்கள் சிரமம்

NEWS COVER
0

மகளிர் உரிமை தொகை: காரணம் தெரிந்துகொள்ளும் இணையதளம் செயல்படவில்லை!!



கலைஞர் மகளிர் உரிமை தொகை கடந்த செப்டம்பர் 14ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் சுமார் 1.06 கோடி மகளிருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 57 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் https://kmut.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப நிலையை அறியலாம் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இணையதளம் வேலை செய்யவில்லை. அப்படியே உள்ளே சென்றாலும் விண்ப்ப நிலையை அறியும் இடத்தில் ஓடிபி பகுதி இன்னமும் வேலை செய்யவில்லை.

உள்ளே சென்றாலும் விண்ணப்ப நிலையை அறிய முடியவில்லை என்று பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். 

விரைவில் இணையதளம் வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்