Breaking News

நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி திரை விமர்சனம் Mark Antony

NEWS COVER
0

நடிகர்கள்:-

விஷால்

எஸ்.ஜே. சூர்யா

செல்வராகவன்

ஒய்.ஜி.மகேந்திரனின்

இசை

ஜி.வி.பிரகாஷ் 

இயக்கம்:-

ஆதிக் ரவிச்சந்திரன் 

தயாரிப்பு:-

வினோத் குமார் 



கதை:-

பல வருட முயற்சிக்கு பின் 1975ல் போன் மூலம் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்கிறார் செல்வராகவன்  (அதாவது இந்த டைம் டிராவல் மூலம் பேசமட்டும் தான் முடியும்) இந்த டைம் டிராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் மாற்றுகிறார் செல்வராகவன்அப்படி அவர் செய்யும் முயற்சியில் அவருடைய உயிர் பறிபோகிறது. 

சென்னையில் ஒரு வொர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். விஷால் (மார்க்) மேலும் அவர் தன்னுடைய தந்தை ஆண்டனி (விஷால்) தான் தன்னுடைய தாயார் மறைவுக்கு காரணம் என்று தனது தந்தை மறைந்து 20 ஆண்டுகள் ஆனாலும் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்.  

ஆண்டனி விஷால் இறந்த பின் அவருடைய மகனான மார்க்கை ஆண்டனியின் நெருங்கிய நண்பன் எஸ்.ஜே.சூர்யா  வளர்த்து வருகிறார்.

மேலும் தன்னுடைய தந்தையை கொன்றுவிட்டு மிகப்பெரிய டான் ஆகா நாம் மாறிவிடலாம் என சூர்யாவின்  மகன் மதன் பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) திட்டமிடுகிறார். 

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் 1995ல் இந்த டைம் டிராவல் போன் விஷால் ( மார்க் ) இடம் கிடைக்கின்றது, 

இதனை வைத்து நடந்த அனைத்தையும் மாற்றலாம் என எண்ணி மார்க் அதில் இறங்கும்போது தன்னுடைய தந்தை மார்க் ஆண்டனி மிகவும் நல்லவர்  என்றும் அவர் மீது ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கியது தன்னை வளர்த்து வரும் ஜாக்கி பாண்டியன் தான் என்பது தெரிய வருகிறது. இதற்கு பிறகு நடந்தது என்ன என்பது தான் படத்தின் கதை.