Breaking News

BIG BREAKING NEWS ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உட்பட 5 போட்டிகள் சேர்ப்பு.!

NEWS COVER
0

BIG BREAKING NEWS ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உட்பட 5 போட்டிகள் சேர்ப்பு.!



2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . 

அதன்படி, 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட், ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நிலையில்

தற்போது  2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. அந்த பரிந்துரை பட்டியலில் பிளாக் கால்பந்து, பேஸ்பால், சாப்ட்பால், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில் கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட 5 விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.

Tags: உலக செய்திகள் தமிழக செய்திகள்