ராகுல் காந்தி மீது அவதூறு தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் கைது.
ராகுல் காந்தி மீது அவதூறு! தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் கைது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல், பிரியங்கா காந்தி குறித்து டிவிட்டர் தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட புகாரில் பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜை போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்துள்ளார்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்தார்
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை அடுத்து இன்று அதிகாலை பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரவீன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமார்
தமிழக பாஜக இளைஞரணி சமூக ஊடக பொறுப்பாளர் அன்புதம்பி பிரவீன் ராஜ் அவர்களை இன்று அதிகாலை 2 மணி அளவில் நாமக்கல் ராசிபுரத்தில் அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளது தமிழக காவல்துறை.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதற்கான காரணம் காவல்துறையின் முழு கவனமும் சமூக வலைதளத்தில் மட்டுமே இருப்பதுதான். சமூகத்திற்கு எதிரான கடும்குற்றங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை நிம்மதியாக உறங்க வைத்துவிட்டு சமூக வலைதளங்களில் திமுகவிற்கு எதிராக கருத்து சொல்லும் பாஜக இளைஞரணி நிர்வாகியை அதிகாலை கைது செய்திருக்கிறது கையாலாகத காவல்துறை. இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் வர இருக்கும் நிலையில் இதுபோன்ற அரசியல் கைது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது. 2024 தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதிசெய்யபடுகிறது. இதுபோன்ற அடக்குமுறைகளால் எந்தவொரு பாஜக தொண்டனையும் முடக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்