நாளை முதல் திருப்பதியில் சிறப்பு தரிசனம் ரத்து – தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு
திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு தரிசன சேவை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பலரும் கோயிலுக்கு தரிசனத்திற்காக வருகை புரிபவர்கள் அதனால் அனைவரும் சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனால் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
Tags: தமிழக செய்திகள்