மிக்ஜாம் (Michaung)புயல் எச்சரிக்கை! தமிழகத்தில் 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! 144 ரயில்கள் ரத்து...!
NEWS COVER
0
மிக்ஜாம் புயல் எச்சரிக்கை! தமிழகத்தில் 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! 144 ரயில்கள் ரத்து...!
GET NEWS COVER
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வரும் 5 ம் தேதி மசூலிப்பட்டிணம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michegam)
என பெயரிடப்பட்டுள்ளது. எனவே அதன் காரணமாக தமிழகத்தில்,
சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
ஆகிய 4 மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை (04.12.2023) அன்று பள்ளி கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 நாட்களுக்கு தெற்கு ரயில்வேயின் 144 ரயில்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: வானிலை செய்திகள்