5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது! பள்ளிகல்வித்துறை உத்தரவு.!
NEWS COVER
0
5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது! பள்ளிகல்வித்துறை உத்தரவு.!
GET NEWS COVER
பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் ஐந்தாண்டுகளுக்கு பணியிட மாறுதல் எதுவும் கிடையாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் அதிகமாக உள்ளன.
எனவே ஆசிரியர்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தற்போது புதிதாக நியமனம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு பணியிட மாறுதல் எதுவும் கிடையாது என தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் செயலாளர் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்