மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம்! தமிழக முதல்வர் அறிவிப்பு.!
NEWS COVER
0
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம்! தமிழக முதல்வர் அறிவிப்பு.!
GET NEWS COVER
தமிழகத்தில் கடந்த 4 ம் தேதி மற்றும் 5 ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கன மழை காரணமாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து பெற்று வருகின்றன.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு ஹெக்டருக்கு 17,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 6000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணத் தொகை அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்