Breaking News

வெள்ளப்பெருக்கு காரணமாக தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நிறுத்தம்.

NEWS COVER
0
தென்மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நிறுத்தம்.!
GET NEWS COVER

 திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காணப்படுகிறது.

 ஆங்காங்கே வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்பு படை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆங்காங்கே தரைப்பாளங்கள் மற்றும் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ள படியால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

 ஏற்கனவே தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியது நீண்ட போராட்டத்திற்கு பிறகு பயணிகள் அனைவரும் பேருந்து மீட்கப்பட்டனர். எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை விருதுநகர் தென்காசி கன்னியாகுமரி செல்லும் ஆம்னி பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்