Breaking News

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பரிசு.! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

NEWS COVER
0
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் பரிசு.! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

GET NEWS COVER

சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு, 2024 மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் பரிசு பொருட்கள் வழங்கப்படும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 15.12.2023 முதல் 15.03.2024 வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி உடன் இணைந்து பரிசு பொருள் வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.




Tags: தமிழக செய்திகள்