தமிழகத்தில் வரும் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!வானிலை மையம் எச்சரிக்கை.
NEWS COVER
0
தமிழகத்தில் வரும் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் எச்சரிக்கை.
GET NEWS COVER
தமிழகத்தில் வரும் ஏழு நாட்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மற்றும் தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த அதிக கனமழையால் பெருமளவு வெள்ளைக்காடாகி சேதங்கள் ஏற்பட்டது. தற்பொழுது சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் மீண்டும் வரும் வாரங்களில் தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் பெரம்பலூர் திருச்சி செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிக கனமானது வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜனவரி முதல் வாரத்திலும் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்