தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் பலி!
NEWS COVER
0
தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் பலி!
GET NEWS COVER
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்று போல தற்போது JN 1 என்ற புதிய வகை வைரஸ் தொற்று பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னையில் 25 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கும் நாமக்கல்,சேலம்,கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார் எனவே மக்கள் அனைவரும் இனிமேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்